ஸ்ரீ ஆதி சங்கராசார்ய மந்திர், கன்னியாகுமரி
பாரத நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு ஸ்ரீ ஆதி சங்கராசார்ய ஸ்வாமிகள் அத்வைத கொள்கைகளை பற்றி படித்தோருக்கும் பாமர மக்களுக்கும் எடுத்துரைத்தார். ஸ்ரீ ஆதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் திருகோயில் நம் நாடு முழுவதும் அமைந்திருக்கிறது. தேசிய ஒருமைபாட்டிற்கான அவரது முயர்ச்சிக்கு இது ஒரு சான்றாகும். தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் கடற்கறைக்கு வலப்பக்கத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீ ஆதி சங்கராசார்ய மந்திர். பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் கன்னியாகுமரிக்கு வருகை தந்த போது எடுக்கப்பட்ட புகைபடங்கள் இவை.